புலனாய்வு நிருபராக ரித்திகா சிங் ???



நடிகை ரித்திகா சிங் 'ஆண்டவன் கட்டளை' படத்தில் புலனாய்வு நிருபராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தர்மதுரை படத்திற்குப் பின்னர் 'ஆண்டவன் கட்டளை' படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இறுதிச்சுற்று படத்திற்குப் பின்னர் ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார். 


ஆண்டவன் கட்டளை படத்தை மணிகண்டன் இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என். அன்பு செழியன் தயாரிக்கிறார். படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் எடிட்டராக 'கிருமி' இயக்குநர் அனுசரண் பணியாற்ற இருக்கிறார். 

கதைபடி விஜய் சேதுபதி ஐ.டி. துறையில் வேலை செய்து வருகிறார். படத்தில் ரித்திகாசிங் துணிச்சல் மிகுந்த புலனாய்வு பத்திரிகை ரிப்போர்ட்டராக நடிக்கிறார். ஒரு பெரிய கொலை குற்றத்தை தன் பத்திரிகை திறமையால் கண்டுபிடிப்பதுதான் படத்தை கதையாம். விஜய் சேதுபதியை கண்டு தினமும் பயப்படுவாராம் ரித்திகாசிங். காரணம் அவர் முகம் எப்போதும் கோபமாக இருக்கும் என்பதால் வந்த பயமாம். 

சினிமாவிற்காக அவர் ரியாக்ஷன்தான் அப்படி என்று தெரியவரவே அப்புறம் ஜாலியாக பழக ஆரம்பித்து விட்டாராம் ரித்திகா சிங். விஜய்சேதுபதி, ரித்திகா சிங் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை சுற்றி நடக்கிற கதை. விரைவில் இந்தப் படத்தின் பாடல்களை வெளியிட உள்ளனர் படக்குழுவினர். இப்படத்துக்காக பிரம்மாண்டமான தூதரகம் அரங்கு அமைத்து இறுதிகட்டப் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். 

இப்படத்தின் கதைகளம் குறித்து இயக்குநர் மணிகண்டன் 'காக்கா முட்டை' படம் போல 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் இருக்காது. எதார்த்தத்தை மீறாத பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் மணிகண்டன். சாதாரண மனிதன் பார்வையில் இந்த அமைப்பின் மீது இருக்கும் பிரச்சினைகளை இப்படம் பேசும். 


வழக்கமாக நீங்கள் பார்க்கும் நாயகி போல ரித்திகா சிங் இப்படத்தில் இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார் மணிகண்டன். காக்கா முட்டை படத்திற்குப் பின்னர் வித்தார்த் நடிப்பில் மணிகண்டன் இயக்கி உள்ள படம் 'குற்றமே தண்டனை' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


தனுஷுக்கு வில்லனாக மாறிய கவுதம் மேனன்?


இயக்குனர் கவுதம் மேனன் தனது சொந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். 

இயக்குனர் கவுதம் மேனனின் படங்களில் எல்லாம் வில்லன்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும். வில்லனாக நடிக்கும் நடிகர்கள் அதன் பிறகு ஹீரோவாகும் அளவுக்கு பிரபலம் ஆவார்கள்.


அப்படி புகழ்பெற்ற அவரது வில்லன்களுக்கு எல்லாமே குரல் கொடுத்தது அவர் தான். அவர் குரலே மிரட்டலாக இருக்கும் என்றால் நடிப்பு? இதுவரை எத்தனையோ பேர் தூண்டில் போட்டும் கூட கவுதம் இந்த விஷயத்தில் மசியவே இல்லை. ஆனால் தன் சொந்தப் படத்துக்காக நடிகராக களம் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள். 




என்னை நோக்கிப் பாயும் தோட்டாவில் தனுஷுக்கு வில்லனே கவுதம் மேனன் தான்என்கிறது பட யூனிட்டை சேர்ந்த சோர்ஸ் ஒன்று. வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். படத்தில் தனுஷ், மேகா ஆகாஷோடு தெலுங்கு நடிகர் ராணாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

புலியுடன் நடிக்கும் சந்தானம்????


ஹீரோ கெரியரை தில்லுக்கு துட்டு ஹிட் மூலம் வெற்றிகரமாக தொடங்கிவிட்டார் சந்தானம். 

அடுத்து சர்வர் சுந்தரம் பட ரீமேக்கில் நடிக்கும் சந்தானம் அதற்கு அடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா? மணிகண்டன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

அதற்கு பிறகு சந்தானம் நடிக்கவிருப்பது ஒரு புலியுடன். புதுமுக இயக்குனர் பச்சையப்பன் ராஜா என்பவர் இயக்கும் இந்த படத்தில் சந்தானம் புலியுடன் மோதுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன. 


இதற்காக கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைப்பதற்காக அமெரிக்கா, லண்டன் தொழில்நுட்ப வல்லுனர்களை அணுகியுள்ளதாம் படக்குழு. கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் நான்கு கோடிகளை ஒதுக்கியுள்ளதாம் தயாரிப்பு. புலியோ எலியோ எதுகூட மோதுனாலும் காமெடி இருக்கற மாதிரி பார்த்துக்குங்க... அது தான் நல்லது!

வில்லனான அப்பாஸ்??/


போன தலைமுறை அமுல் பேபிகள் எல்லாம் கொடூர வில்லனாகும் காலம் இது. 

ஒரு காலத்தில் பெண்களின் அபிமான ஹீரோவாக விளங்கிய அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார். அவரது நடிப்பாலேயே அந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

அரவிந்த் சாமியைத் தொடர்ந்து அப்போதைய சாக்லேட் பேபி அப்பாஸும் கொடூர வில்லனாக நடிக்கிறார். 


சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அப்பாஸ் விளம்பரங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். பச்ச கள்ளம் என்னும் மலையாள படத்தின் ரீமேக்கில் பெண்களை கடத்தி பலாத்காரம் செய்து கொல்லும் கொடூர வில்லன் வேடமாம். தமிழ் படத்துக்கு 'கண்களால் ஒரு கவிதை' என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

துல்கர் சல்மானுடன் கள்ளக்காதலா?


நடிகர் துல்கர் சல்மானுக்கும் தனக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்து நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் மம்மூட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான், நித்யா மேனன் ஜோடி அம்சமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் நடித்த ஓகே கண்மணி படத்தில் கூட அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.

இந்நிலையில் நித்யா மேனனுக்கும், துல்கர் சல்மானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் துல்கருக்கும், அவரது மனைவி அமல் சுபியாவுக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது என்று கூறப்பட்டது.

நான் யாருடன் சேர்ந்து நடித்தாலும் அவருடன் எனக்கு தொடர்பு உள்ளது என்று செய்தி வெளியிடுவதே இந்த மீடியாவுக்கு வேலையாகிப் போச்சு. அதனால் இதை எல்லாம் நான் கண்டுகொள்வதே இல்லை என்றார்.

17 வருஷமாச்சு, ஆனால் அந்த ஆசை மட்டும் நிறைவேறவே இல்லையே???


நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த ஒரேயொரு விஷயம் மட்டும் நடக்கவே இல்லை என்று வருத்தப்படுகிறார் த்ரிஷா. த்ரிஷா நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்த த்ரிஷா பின்னர் ஹீரோயின் ஆனார். 

இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரயினாக இருந்து வருகிறார். இது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல.

எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் உள்ளது. நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. யாருக்கு தான் அவருடன் நடிக்க ஆசை இருக்காது.

நான் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோயினாக இருப்பது பற்றி பலர் கேட்கிறார்கள். நடிப்பது தான் என் தொழில். வேறு யாரும் இப்படி இத்தனை ஆண்டுகளாக ஹீரோயினாக இல்லை என்று கூறுவதை பார்க்கும்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.


மாடலிங் செய்தபோது படங்களில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறினேன். அதன் பிறகு எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். தற்போது நான் வாழ்க்கையின் போக்கில் செல்கிறேன்.

அண்மையில் நடந்த விருது விழாவில் த்ரிஷாவும், அவரது முன்னாள் காதலர் ராணாவும் சந்தித்துக் கொண்டதுடன் நன்றாக பேசிக் கொண்டனர். இது குறித்து த்ரிஷாவிடம் கேட்டதற்கு, இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க மாட்டேன் என்றார்.


விளக்குமாறும், கையுமாக ஆவடியை சுத்தம் செய்ய கிளம்பிய சூர்யா!!!


எஸ். 3 படப்பிடிப்பில் இருந்து கிடைத்த பிரேக்கில் நடிகர் சூர்யா சென்னை ஆவடியில் குப்பையை அள்ளி பொது இடங்களை சுத்தம் செய்துள்ளார். 


சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்.3.ல் நடித்துக் கொண்டிருக்கிறார். எஸ்.3. தீபாவளிக்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

கடந்த 2 மாதங்களாக ஷூட்டிங்கில் பிசியாக இருந்த சூர்யாவுக்கு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் ஹாயாக வீட்டில் அமர்ந்து பீட்சா, பர்கர் சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்க்கவில்லை. 


மாறாக விளக்குமாறும், கையுமாக சென்னை ஆவடி பகுதியில் குப்பையை அள்ளி சுத்தம் செய்துள்ளார். தான் சுத்தம் செய்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஆவடி பகுதியை சுத்தமாக்கி பசுமையானதாக ஆக்க அவர் துவங்கிய பசுமை ஆவடி திட்டத்தின் கீழ் அவர் சுத்தம் செய்துள்ளார். 


மேலும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து பல்வேறு பகுதிகளை தேர்வு செய்து சுத்தம் செய்து வருகிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் சூர்யா.