நெருப்புடா.. கபாலிடா.. பரபரப்பு இப்போதைக்கு ஓயாது.. ஒட்டுமொத்த திரையுலகையும் கபாலி விஸ்வரூபம் எடுத்து வியாபித்து நிற்கிறார். அந்த விஸ்வரூபத்தை லைட்டாக ஒதுக்கி விட்டு விஜய் குறித்த ஒரு செய்தியை இப்போது பார்க்கலாம்.
இந்தப் படத்துக்கும் கபாலி படத்துக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. ஆம், கபாலி படத்திற்கு நெருப்புத்தனமாக இசையமைத்த சந்தோஷ் நாராயணன்தான் விஜயின் இந்த 60வது படத்துக்கும் இசையமைக்கிறார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி என அசத்தி வரும் சந்தோஷ் நாராயணன் தற்போது விஜய்யிடம் வந்து நிற்கிறார். எப்படி ரஜினிக்காக அசத்தலாக நெருப்புடா என்று சொன்னாரோ அதேபோல விஜய்க்கும் ஒரு சூப்பர் மேட்டரை வைத்திருப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

0 comments: