புலனாய்வு நிருபராக ரித்திகா சிங் ???



நடிகை ரித்திகா சிங் 'ஆண்டவன் கட்டளை' படத்தில் புலனாய்வு நிருபராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தர்மதுரை படத்திற்குப் பின்னர் 'ஆண்டவன் கட்டளை' படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இறுதிச்சுற்று படத்திற்குப் பின்னர் ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார். 


ஆண்டவன் கட்டளை படத்தை மணிகண்டன் இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என். அன்பு செழியன் தயாரிக்கிறார். படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் எடிட்டராக 'கிருமி' இயக்குநர் அனுசரண் பணியாற்ற இருக்கிறார். 

கதைபடி விஜய் சேதுபதி ஐ.டி. துறையில் வேலை செய்து வருகிறார். படத்தில் ரித்திகாசிங் துணிச்சல் மிகுந்த புலனாய்வு பத்திரிகை ரிப்போர்ட்டராக நடிக்கிறார். ஒரு பெரிய கொலை குற்றத்தை தன் பத்திரிகை திறமையால் கண்டுபிடிப்பதுதான் படத்தை கதையாம். விஜய் சேதுபதியை கண்டு தினமும் பயப்படுவாராம் ரித்திகாசிங். காரணம் அவர் முகம் எப்போதும் கோபமாக இருக்கும் என்பதால் வந்த பயமாம். 

சினிமாவிற்காக அவர் ரியாக்ஷன்தான் அப்படி என்று தெரியவரவே அப்புறம் ஜாலியாக பழக ஆரம்பித்து விட்டாராம் ரித்திகா சிங். விஜய்சேதுபதி, ரித்திகா சிங் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை சுற்றி நடக்கிற கதை. விரைவில் இந்தப் படத்தின் பாடல்களை வெளியிட உள்ளனர் படக்குழுவினர். இப்படத்துக்காக பிரம்மாண்டமான தூதரகம் அரங்கு அமைத்து இறுதிகட்டப் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். 

இப்படத்தின் கதைகளம் குறித்து இயக்குநர் மணிகண்டன் 'காக்கா முட்டை' படம் போல 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் இருக்காது. எதார்த்தத்தை மீறாத பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் மணிகண்டன். சாதாரண மனிதன் பார்வையில் இந்த அமைப்பின் மீது இருக்கும் பிரச்சினைகளை இப்படம் பேசும். 


வழக்கமாக நீங்கள் பார்க்கும் நாயகி போல ரித்திகா சிங் இப்படத்தில் இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார் மணிகண்டன். காக்கா முட்டை படத்திற்குப் பின்னர் வித்தார்த் நடிப்பில் மணிகண்டன் இயக்கி உள்ள படம் 'குற்றமே தண்டனை' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


0 comments:

தனுஷுக்கு வில்லனாக மாறிய கவுதம் மேனன்?


இயக்குனர் கவுதம் மேனன் தனது சொந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். 

இயக்குனர் கவுதம் மேனனின் படங்களில் எல்லாம் வில்லன்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும். வில்லனாக நடிக்கும் நடிகர்கள் அதன் பிறகு ஹீரோவாகும் அளவுக்கு பிரபலம் ஆவார்கள்.


அப்படி புகழ்பெற்ற அவரது வில்லன்களுக்கு எல்லாமே குரல் கொடுத்தது அவர் தான். அவர் குரலே மிரட்டலாக இருக்கும் என்றால் நடிப்பு? இதுவரை எத்தனையோ பேர் தூண்டில் போட்டும் கூட கவுதம் இந்த விஷயத்தில் மசியவே இல்லை. ஆனால் தன் சொந்தப் படத்துக்காக நடிகராக களம் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள். 




என்னை நோக்கிப் பாயும் தோட்டாவில் தனுஷுக்கு வில்லனே கவுதம் மேனன் தான்என்கிறது பட யூனிட்டை சேர்ந்த சோர்ஸ் ஒன்று. வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். படத்தில் தனுஷ், மேகா ஆகாஷோடு தெலுங்கு நடிகர் ராணாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

புலியுடன் நடிக்கும் சந்தானம்????


ஹீரோ கெரியரை தில்லுக்கு துட்டு ஹிட் மூலம் வெற்றிகரமாக தொடங்கிவிட்டார் சந்தானம். 

அடுத்து சர்வர் சுந்தரம் பட ரீமேக்கில் நடிக்கும் சந்தானம் அதற்கு அடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா? மணிகண்டன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

அதற்கு பிறகு சந்தானம் நடிக்கவிருப்பது ஒரு புலியுடன். புதுமுக இயக்குனர் பச்சையப்பன் ராஜா என்பவர் இயக்கும் இந்த படத்தில் சந்தானம் புலியுடன் மோதுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன. 


இதற்காக கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைப்பதற்காக அமெரிக்கா, லண்டன் தொழில்நுட்ப வல்லுனர்களை அணுகியுள்ளதாம் படக்குழு. கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் நான்கு கோடிகளை ஒதுக்கியுள்ளதாம் தயாரிப்பு. புலியோ எலியோ எதுகூட மோதுனாலும் காமெடி இருக்கற மாதிரி பார்த்துக்குங்க... அது தான் நல்லது!

0 comments:

வில்லனான அப்பாஸ்??/


போன தலைமுறை அமுல் பேபிகள் எல்லாம் கொடூர வில்லனாகும் காலம் இது. 

ஒரு காலத்தில் பெண்களின் அபிமான ஹீரோவாக விளங்கிய அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார். அவரது நடிப்பாலேயே அந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

அரவிந்த் சாமியைத் தொடர்ந்து அப்போதைய சாக்லேட் பேபி அப்பாஸும் கொடூர வில்லனாக நடிக்கிறார். 


சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அப்பாஸ் விளம்பரங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். பச்ச கள்ளம் என்னும் மலையாள படத்தின் ரீமேக்கில் பெண்களை கடத்தி பலாத்காரம் செய்து கொல்லும் கொடூர வில்லன் வேடமாம். தமிழ் படத்துக்கு 'கண்களால் ஒரு கவிதை' என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

0 comments:

துல்கர் சல்மானுடன் கள்ளக்காதலா?


நடிகர் துல்கர் சல்மானுக்கும் தனக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்து நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் மம்மூட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான், நித்யா மேனன் ஜோடி அம்சமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் நடித்த ஓகே கண்மணி படத்தில் கூட அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.

இந்நிலையில் நித்யா மேனனுக்கும், துல்கர் சல்மானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் துல்கருக்கும், அவரது மனைவி அமல் சுபியாவுக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது என்று கூறப்பட்டது.

நான் யாருடன் சேர்ந்து நடித்தாலும் அவருடன் எனக்கு தொடர்பு உள்ளது என்று செய்தி வெளியிடுவதே இந்த மீடியாவுக்கு வேலையாகிப் போச்சு. அதனால் இதை எல்லாம் நான் கண்டுகொள்வதே இல்லை என்றார்.

0 comments:

17 வருஷமாச்சு, ஆனால் அந்த ஆசை மட்டும் நிறைவேறவே இல்லையே???


நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த ஒரேயொரு விஷயம் மட்டும் நடக்கவே இல்லை என்று வருத்தப்படுகிறார் த்ரிஷா. த்ரிஷா நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்த த்ரிஷா பின்னர் ஹீரோயின் ஆனார். 

இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரயினாக இருந்து வருகிறார். இது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல.

எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் உள்ளது. நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. யாருக்கு தான் அவருடன் நடிக்க ஆசை இருக்காது.

நான் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோயினாக இருப்பது பற்றி பலர் கேட்கிறார்கள். நடிப்பது தான் என் தொழில். வேறு யாரும் இப்படி இத்தனை ஆண்டுகளாக ஹீரோயினாக இல்லை என்று கூறுவதை பார்க்கும்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.


மாடலிங் செய்தபோது படங்களில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறினேன். அதன் பிறகு எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். தற்போது நான் வாழ்க்கையின் போக்கில் செல்கிறேன்.

அண்மையில் நடந்த விருது விழாவில் த்ரிஷாவும், அவரது முன்னாள் காதலர் ராணாவும் சந்தித்துக் கொண்டதுடன் நன்றாக பேசிக் கொண்டனர். இது குறித்து த்ரிஷாவிடம் கேட்டதற்கு, இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க மாட்டேன் என்றார்.


0 comments:

விளக்குமாறும், கையுமாக ஆவடியை சுத்தம் செய்ய கிளம்பிய சூர்யா!!!


எஸ். 3 படப்பிடிப்பில் இருந்து கிடைத்த பிரேக்கில் நடிகர் சூர்யா சென்னை ஆவடியில் குப்பையை அள்ளி பொது இடங்களை சுத்தம் செய்துள்ளார். 


சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்.3.ல் நடித்துக் கொண்டிருக்கிறார். எஸ்.3. தீபாவளிக்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

கடந்த 2 மாதங்களாக ஷூட்டிங்கில் பிசியாக இருந்த சூர்யாவுக்கு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் ஹாயாக வீட்டில் அமர்ந்து பீட்சா, பர்கர் சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்க்கவில்லை. 


மாறாக விளக்குமாறும், கையுமாக சென்னை ஆவடி பகுதியில் குப்பையை அள்ளி சுத்தம் செய்துள்ளார். தான் சுத்தம் செய்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஆவடி பகுதியை சுத்தமாக்கி பசுமையானதாக ஆக்க அவர் துவங்கிய பசுமை ஆவடி திட்டத்தின் கீழ் அவர் சுத்தம் செய்துள்ளார். 


மேலும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து பல்வேறு பகுதிகளை தேர்வு செய்து சுத்தம் செய்து வருகிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் சூர்யா.


0 comments:

300 பேரை கொன்று குவித்து கொக்கரிக்கும் மொட்டை கார்த்தி???


கார்த்தி நடித்துள்ள காஷ்மோரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது. கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காஷ்மோரா. 

கார்த்தி இந்த படத்திற்கு என மெனக்கெட்டு கெட்டப்பை மாற்றியுள்ளார். படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் காஷ்மோரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கார்த்தி மொட்டைத் தலையும், கத்தை தாடியுமாக பார்க்கவே வித்தியாசமாக உள்ளார். 

பர்ஸ்ட் லுக்கே பெஸ்ட் லுக்காக உள்ளது. படத்தில் கார்த்தி வில்லத்தனமும் செய்வதாக கூறப்படுகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கார்த்தி மிரட்டலாக உள்ளார் என்றே கூற வேண்டும். இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறுகையில், படத்தில் கார்த்தி 3 வித்தியாசமான கெட்டப்புகளில் வருவார். 47 கெட்டப்புகளை செய்து பார்த்து அதில் 3 கெட்டப்புகளை தேர்வு செய்தோம். 

இந்த போஸ்டர் காட்சியில் மட்டும் 300 ஜூனியர் ஆர்டிஸ்டுகள் நடித்துள்ளனர் என்றார். காஷ்மோரா படத்தில் நாம் இதுவரை பார்த்திராத கார்த்தியை பார்க்கலாம் போன்று. பார்க்க கட்டப்பா கெட்டப்பில் அசத்தலாக இருக்கிறார் கார்த்தி 



0 comments:

அனுஷ்கா எடையால் மூட் அவுட் ஆன ராஜமவுலி.....!!


உலக அளவில் இதுவரை எந்த இந்திய படமுமே பிடிக்காத இடத்தை பிடித்துள்ளது பாகுபலி 2. பிரம்மாண்டத்தின் உச்சகட்டமாக இன்னும் பல ஆண்டுகளுக்கு விளங்கவிருக்கிறது. இப்படி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு சீரியஸாக இருக்க வேண்டும்? ஆனால் அனுஷ்கா எடுத்த ஒரு லைஃப் ரிஸ்கால் பாகுபலி 2 ஷூட்டிங்கையே தள்ளி வைத்துவிட்டு மன வருத்தத்தில் இருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. 


எல்லாம் இந்த இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றியதுதான். பாகுபலியில் ஒல்லி அனுஷ்காவாக நடித்திருந்த அனுஷ்கா இடையில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்துக்காக இருமடங்கு தன் எடையை ஏற்றினார். குறைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் ஏற்றினார்.

ஆனால் இப்போது குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார். ஓரளவுக்குமேல் எடை குறையாமல் பூசியபடியே தோற்றமளிக்கிறார். பாகுபலி 2 வில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை அப்படியே வைத்து எடுத்துவிட்ட ராஜமௌலி முக்கியமான க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுக்க முடியாமல் டென்ஷன் ஆகிவிட்டார். 



அனுஷ்காவின் பூசிய தோற்றம் ஃப்ரேமில் நன்கு தெரிவதால் ஷூட்டிங்கையே பேக் அப் செய்துவிட்டு உடல் எடையை குறைத்துவிட்டு வா என்று அனுப்பிவிட்டாராம். அனுஷ்காவின் முட்டாள்தனத்தால் பாகுபலி 2 ரிலீஸே தள்ளிப்போகும் போல!


0 comments:

ஜோக்கரை பார்த்து கண்ணீர்விட்ட தனுஷ்???


ஜோக்கர் படத்தை பார்த்த தனுஷ் கண்ணீர் விட்டுள்ளார். மேலும் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார். 


ராஜுமுருகன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ஜோக்கர். அரசியல் சாட்டையடி, வேடிக்கை மனிதர்களுக்கு ஒரு செருப்படி என்று ஜோக்கர் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.

கதை தான் ஹீரோ. ஜிம் பாடி ஹீரோ இல்லை, நா. முத்துக்குமார் எழுதியது போன்று அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்பது போன்ற நடிகை. இருப்பினும் படத்தை கொண்டாட ரசிகர்கள் தவறவில்லை.



இந்நிலையில் தான் தனுஷ் ஜோக்கர் படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த பிறகு அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


0 comments:

சிம்புவுக்கு அம்மாவாக ஸ்ரேயா!!!



சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் கதை என்ன என்பது தெரிய வந்துள்ளது. ஸ்ரேயா சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறாராம். சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். 


முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சிம்புவின் பரிந்துரையின் பேரில் ஒய்.ஜி. மகேந்திரன் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். படத்தில் ஸ்ரேயாவும் உள்ளார். இந்நிலையில் படத்தின் கதை பற்றி தெரிய வந்துள்ளது.

சிம்பு தந்தையாகவும், இரட்டையர்களாகவும் நடிக்கிறாராம். இரட்டையர்களில் ஒருவர் நிழல் உலக தாதாவாம். தாதா கதாபாத்திரம் வரும் காட்சிகள் துபாயில் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தந்தை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா இரட்டையர் மகன்களுக்கு அம்மா. அதாவது சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறார் ஸ்ரேயா. பாலிவுட்டிலும் கூட சீனியர் கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார் ஸ்ரேயா.



இரட்டையர்களுக்கு யார், யார் ஜோடி என்பது இன்னும் தெரியவில்லை. கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். இதற்கிடையே ஹன்சிகா நடிப்பார் என்று வேறு ஒரு வதந்தி பரவி அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

இப்போதைய ஹீரோக்கள் கைத்தட்டல் வாங்குவதன் ரகசியம் இதானா??


அண்மையில் ஒரு நாள் மாலை போடிநாயக்கனூரில் ஒரு சினிமா தியேட்டர். ஒரு வாரிசு நடிகர் நடித்து வெளியான படம். 

படம் ஆரம்பித்து சுமார் 20 நிமிடங்கள் இருக்கும் என்பதால் இருட்டிலேயே சீட் தேடிக் கண்டுபிடித்து அமர்ந்தோம். ஹீரோ வரும் ஸீன்களுக்கு எல்லாம் செம கைதட்டல்கள், விசில் சத்தம். அட..இந்த ஊரில் அதுவும் படம் ரிலீஸாகி சுமார் 10 நாட்கள் கழித்தும் இத்தனை ரெஸ்பான்ஸா...? என்று வியந்து போனேன்.

முன்னும் பின்னும் பார்த்தால் மொத்தமே 20 பேர் கூட இல்லை. பிறகெப்படி இவ்வளவு சத்தம்? வியப்போடு, தியேட்டர்களில் ஆடியோ சிஸ்டம் நிறுவி பழுது பார்ப்பவரான அழகுராஜா என்பவரிடம் பேசினோம்.

"தம்பி இப்பல்லாம் எந்த ஹீரோவுமே ஆடியன்ஸை நம்புறது இல்லை. விசில், கிளாப்ஸ் சத்தமெல்லாம் படம் கொடுக்கும்போதே சிடில கொடுத்துடுவாங்க. படத்தோட அதையும் ஓட்டணும். இந்த நடைமுறை வந்து சுமார் ஆறு மாசம் ஆகுது. தியேட்டர்களில் டிஜிடல் ஒளிபரப்பு என்றால் சி.டி பென் ட்ரைவ் மீடியாவிலும், அனலாக் ஃபிலிம் ஒளிபரப்பு என்றால் அதனுடனேயே தேவையான ஒலிகளை தரவேற்றி கொடுத்துடறாங்க. 

பெரிய ஹீரோக்கள்ல சிலரோட படங்களுக்கு ரெகுலரா வந்துடும். சில இளம் ஹீரோக்கள் இப்பத்தான் இந்த ஃபார்முலாவை யூஸ் பண்றாங்க. முன்னெல்லாம் எம்ஜிஆர், சிவாஜிக்கெல்லாம் போட்டி போட்டுட்டு ரசிகர்கள் வருவாங்க.அடுத்தது ரஜினிக்கு அப்படி ஒரு நிலை இருந்தது. இன்னமும் ரஜினி படம்னா இந்த கிளாப்ஸ்லாம் எதுவுமே தேவையில்லை. 

கபாலி படத்துக்கெல்லாம் இன்னிக்கு வரைக்கும் கூட்டம் வருது. தானாகவே கிளாப்ஸ் கிடைக்குது. இதெல்லாம் இப்ப உள்ள ஹீரோக்களுக்கு எப்ப புரியப் போகுதோ தெரியலை,'' என அலுத்துக்கொண்டார். சென்னை திரும்பியதும் இதுபற்றி பேச சென்னையின் பிரபல தியேட்டர் ஆபரேட்டர்களை 

தொடர்புகொண்டோம். அவர்கள் எவருமே பேச முன்வரவில்லை. ஆனால் இதனை மறுக்கவும் அவர்கள் முன்வரவில்லை. படம் ரிலீஸ் ஆன மறுநாளே சக்சஸ் மீட் என வைத்து தங்களை தாங்களே கொண்டாடிக்கொள்ளும் ஹீரோக்களுக்கு அந்த போடிநாயக்கனூர் தியேட்டர் ஆபரேட்டர் அட்வைஸ் எப்போது புரியும்? சினிமாவுக்குள் பவர்ஸ்டார்கள் எப்போது காலடி எடுத்து வைத்தார்களோ அப்போதே மொத்த சினிமாவும் ரசிகர்களை மட்டுமல்ல சினிமாவையே 

சினிமாவை வைத்து ஏமாற்றலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இது போன்ற அல்பத்தனமான விஷயங்கள் மற்றவர்களை மட்டுமல்ல, தங்கள் தலையில் தாமே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளுவதற்கு சமம் என்பதை என்பதை சினிமாக்காரர்கள் உணர்வார்களா?

0 comments:

கதாநாயகிகளுக்குள் போட்டி ஏற்பட்டு உள்ளது????


“சினிமா துறையில் கடும் போட்டி இருக்கிறது. கதாநாயகிகள் ஒருவரை மிஞ்சி ஒருவர் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் ஒரு படத்தில் சிறப்பாக நடித்து இருந்தால் இன்னொரு படத்தில் வேறொரு நடிகை சிறப்பாக நடிக்கிறார். எனவே நான்தான் சிறந்த நடிகை என்று யாராலும் சொல்ல முடியாது.
சினிமாவில் எந்த நடிகையும் 100 சதவீதம் சிறப்பான நடிப்பை கொடுத்தேன் என்று திருப்திபட்டுக்கொள்ள முடியாது. ரசிகர்களின் பாராட்டுகளே அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது.
நான் தமிழ், இந்தியில் தயாராகும் தேவி படத்தில் கஷ்டப்பட்டு நடனம் ஆடி இருந்தேன். அந்த நடனம் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் குவிகிறது. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. நான்பட்ட கஷ்டங்களை இதில் மறந்து போனேன்.
ஆனால் இது எனது திறமைக்கு கிடைத்த பாராட்டு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள மாட்டேன். என்னை மிஞ்சி இன்னொரு நடிகையாலும் ஆட முடியும். எனது உடல் எடை 50-ல் இருந்து 55 கிலோவுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன்.
இதற்காக உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன். எடையை கூட்டும் உணவுகளை சாப்பிடுவது இல்லை. ஓட்டலில் ஒரு நாள் வெஜிடபிள் சாலட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். எதிரில் ஒரு பெண் எனக்கு பிடித்த இனிப்பு வகைகளை சாப்பிட்டார்.
அதைப் பார்த்ததும் நாக்கில் நீர் ஊறியது. அந்த சாக்லெட் எனது பிளேட்டில் இருக்க கூடாதா? என்று ஆசைப்பட்டேன். ஓட்ஸ், முளை கட்டிய தானியங்களை சாப்பிடும்போது பூரி மற்றும் எண்ணெயில் செய்த உணவு வகைகளை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று ஏங்குவேன்.
அந்த நேரத்தில் ரசிகர்கள் எனது மனக்கண்ணில் வருவார்கள். அவர்கள் என்னை பார்த்து எப்படி சந்தோஷப்படுகிறார்கள் என்று நினைத்து பார்ப்பேன். அவர்களுக்காக ருசியான உணவுகளை தியாகம் செய்யலாம் என்று மனதை தேற்றிக்கொள்வேன்.”

இவ்வாறு நடிகை தமன்னா கூறினார்

0 comments:

நடிகை வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் அதிகாரபூர்வ பதில்!!!


நடிகை வரலட்சுமியைத் திருமணம் செய்வது குறித்து நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார்.
வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், வரலட்சுமியுடன் காதல். கூடிய சீக்கிரமே கல்யாணம்னு சொல்றாங்க. அது எப்போது? என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதில்:
‘வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்தான். ஆமாம், 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம். இப்போதே கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்துவிட்டேன்.’ என்று கூறியுள்ளார்.


0 comments:

ஒரு ஆயிரம் ரூபாய்க்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன் தெரியுமா??



ஒரு ஆயிரம் ரூபாய்க்கு தான் பட்ட கஷ்டத்தை உருக்கமாக தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா. 

டோலிவுட் கொண்டாடும் நாயகியாக இருந்த சமந்தா மெல்ல மெல்ல கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாகிவிட்டார். அட்லீ இயக்கத்தில் அவர் இளைய தளபதி விஜய்யுடன் நடித்த தெறி படம் ஹிட்டானது. படத்தில் சமந்தாவின் நடிப்பு பாராட்டை பெற்றது. இந்நிலையில் தான் கடந்து வந்த பாதை பற்றி சமந்தா கூறுகையில்.

நான் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளேன். ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாய்க்காக கால் கடுக்க மூன்று மணிநேரம் எல்லாம் நின்றிருக்கிறேன்.

14 வயதில் இருந்தே என் தேவைக்கான பணத்தை சம்பாதிக்கத் துவங்கினேன். என் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டேன். அதனால் சிறு சிறு வேலைகள் செய்து என் தேவைக்கான பணத்தை சம்பாதித்தேன்.

திருமணம் நடக்கும்போது மண்டப வாசலில் நின்று இளம்பெண்கள் விருந்தினர் மீது பன்னீர் தெளிப்பது உண்டு. நான் பன்னீர் தெளிக்கும் பணியை செய்திருக்கிறேன். மூன்று மணிநேரம் கால் கடுக்க நின்று பன்னீர் தெளித்தால் ரூ.1000 கொடுப்பார்கள்.

தற்போது தான் அதிகம் சம்பாதிக்கிறேன். இருப்பினும் திருமண மண்டப வாசலில் நின்று பன்னீர் தெளித்து சம்பாதித்த போது இருந்த கிக் இல்லை என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

0 comments:

ஸ்ருதி ஹாஸன் ரொம்ப ரசனையான பொண்ணு தான்!!


ஸ்ருதி ஹாஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ள ஃப்ரொபைல் மற்றும் கவர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. 


ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் ஓடியோடி நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ருதி தான் அவ்வப்போது செய்பவற்றை ட்விட்டர் மூலமாக ரசிகர்களிடம் தெரிவித்து வரும் பழக்கம் உள்ளவர்.


இன்று கூட மும்பையில் மழை பெய்தாலும் அதை பொருட்படுத்தாது வேலைக்கு கிளம்பியதை புகைப்படத்துடன் ட்விட்டரில் கூறியுள்ளார். ஸ்ருதி தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ள ஃப்ரொபைல் மற்றும் கவர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஸ்ருதியின் ரசனை ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. 

இது தவிர ஸ்ருதி விருது விழாக்களுக்கு அணிந்து வரும் உடைகள், நகை, சிகை அலங்காரம் எல்லாம் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல திரையுலக பிரபலங்களுக்கும் பிடித்துள்ளது. 

ரசனையானவர் ஸ்ருதி என்று பெயர் எடுத்துள்ளார். ஸ்ருதி தற்போது தனது தந்தை கமல் ஹாஸனின் சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: