கபாலி மொத்த டிக்கெட்டையும் புக் செய்யும் தனியார் நிறுவனங்கள்???


ரஜினி படத்தினை ரிலீஸ் தினத்தன்றே முதல்நாள் முதல்காட்சி பார்க்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசையாகும். தலைவர் படம் பார்க்கப் போறேன் என்பதுதான் இப்போதைக்கு பலரது பேச்சாக உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்கும் ரஜினி... எதிலும் ரஜினியாக உள்ளார்.

கபாலியை பார்க்க தொழிலாளி முதல் முதலாளி வரை ஆவலாக உள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்காக 'கபாலி' படத்தை காண நிறுவனம் சார்பில் திரையரங்கின் அனைத்து டிக்கெட்களையும் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


'கபாலி' படம் வருகிற ஜூலை 22ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனை முன்னிட்டு சென்னை, நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பல நிறுவனங்கள் சார்பில் 'முதல் நாள் முதல் காட்சி' பார்க்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

தலைவர் ரசிகர்களான பாஸ்கள், சக ஊழியர்களுக்காக அனைத்து டிக்கெட்களையும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments: