ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு 5.35 எனப் பெயரிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பா.ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கிய கபாலி படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது புதிய பட வேலைகளைத் துவக்கி விட்டார் ரஞ்சித். ஆம், இப்படத்தில் சூர்யா தான் நாயகன்.
ஏற்கனவே கார்த்தியை வைத்து ரஞ்சித் மெட்ராஸ் படத்தை இயக்கியபோதே, அடுத்து சூர்யா தான் அவரது நாயகன் எனக் கூறப்பட்டது. ஆனால், இடையில் ரஜினிக்கு படம் பண்ண ரஞ்சித் சென்று விட்டதால், அந்த படம் தள்ளிப் போனது.

0 comments: