கபாலி முதல் நாள் முதல் காட்சி எந்த திரை அரங்கத்தில்..


லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். கபாலி படத்தின் டீசர் முதலில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
பிறகு படத்தின் புதிய பாடல் டீசரும் வெளியிடப்பட்டது. நெருப்புடா பாடலின் டீசர். ரஜினியின் வழக்கமான ஸ்டைலில் காட்சிகள் இருந்ததைக் கண்டு ரசிகர்கள் பரவசமடைந்தார்கள்.
இந்நிலையில் நேற்று கபாலி படம் தணிக்கையில் யூ சான்றிதழ் பெற்றது. இதனையடுத்து படம் ஜூலை 22 அன்று வெளியாகும் என்று அறிவித்தார் தயாரிப்பாளர் தாணு. இதனையடுத்து கபாலி படத்தின் உலகளவிலான முதல் காட்சி மலேசியாவில் நடைபெற உள்ளது என்று அயங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது. 21-ம் தேதி மலேசிய நேரம் இரவு 9 மணிக்கு (இந்திய நேரம் மாலை 6.30) கபாலியின் முதல் காட்சி நடைபெற உள்ளது.
இதனிடையே கபாலி படத்தின் பிரீமியர் என்கிற சிறப்புக் காட்சி ஜூலை 21 அன்று பாரிஸில் உள்ள ரெக்ஸ் சினிமாஸில் இரவு 8.30 மணி அளவில் திரையிடப்படவுள்ளது. பாரிஸில் உள்ள இந்தத் திரையரங்கம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கம் ஆகும். ஒரே சமயத்தில் 2800 அமர்ந்து படம் பார்க்கமுடியும்.. 

0 comments: