நடிகை நயன்தாரா அதிரடியாக தனது சம்பளத்தை நான்கு கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தமிழ்ப் படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்து விட்டதால் வெற்றிப்பட நாயகியாக அவர் வலம் வருகிறார்.

0 comments: