அஜித்துடன் நடித்தே ஆகவேண்டும்!!!!!!



அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவருடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங்.

இந்நிலையில் இந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருப்பது கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சுதீப், இன்னும் தமிழ் மக்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் நான் ஈ படத்தில் வில்லனாக மிரட்டியவர்.

இவர் நடிப்பில் விரைவில் முடிஞ்சா இவன பிடி என்ற படம் வரவுள்ளது. இதற்காக இவர் அளித்த பேட்டியில் ‘அஜித்தும் நானும் நீண்ட நாள் நண்பர்கள், சமீப காலமாக அவருடன் தொடர்பில் இல்லை.

அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும், வில்லனாக நடித்தால் கூட ஓகே தான்’ என கூறியுள்ளார்.


0 comments: