தமிழகத்திலேயே நடிகர் ரஜினிக்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ள பகுதியாய் கருதப்படுவது திருப்பூர் மாவட்டம், ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது பத்தாயிரம் மொட்டை, பழனிக்கு பால்குடம் என அமர்க்களப்படுத்தியவர்கள் திருப்பூர் ரசிகர்கள்.
ஆனால் நாளை கபாலி திரைக்கு வரவிருக்கும் நிலையில் இன்னமும் எந்தந்த தியேட்டர்களில் கபாலி திரையிடப்படும் என உறுதி செய்யப்படவில்லையாம் பட விநியோகஸ்தர்கள் விலை குறைப்புக்கு இறங்கி வர மறுப்பதே இதற்கு காரணமாம்.
இதுவரை ஒரே ஒரு தியேட்டரில் மட்டுமே ஆன்லைன் புக்கிங் தொடங்கப்பட்டதாம் அதுவும் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டதாம். பெரும்பாலும் ஸ்டார் வேல்யு இல்லாத படங்களே அதிக தியேட்டர்களில் வெளியாகும் திருப்பூரில் சூப்பர் ஸ்டாரின் கபாலிக்கு குறைந்த தியேட்டர்கள் மட்டுமே வெளியீட்டுக்கு சம்மதம் தெரிவுத்துள்ள செய்தி அறிந்து ரஜினி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
இன்று(வியாழன்) பிற்பகலுக்குள் நிலைமை சரியாகிவிடும் கபாலி பெருவாரியான திரையரங்குளில் வெளியாகும் என திருப்பூர் ரஜினி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

0 comments: