ரீமேக் ஆகும் ‘அக்னி நட்சத்திரம்’...



தமிழில் பெரும் வெற்றி பெற்ற மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில், தமிழில் கார்த்திக் நடித்த வேடத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

1988ம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய தமிழ்ப் படம் அக்னி நட்சத்திரம். மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், பிரபு, அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜெயசித்ரா, சுமித்ரா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இருதார மகன்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களைக் கொண்டது இப்படத்தின் கதைக்களம். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்.



0 comments: